இது இல்லாத தமிழ் சினிமா இருக்கா..?
1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..
* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
____________________________________________________________________
2) ரெண்டு கதாநாயகி இருந்தா...
* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
* வெளிநாட்டுக்கு போயிடணும்..
* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
_________________________________________________________________
3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...
* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..
________________________________________________________________
ராஜா 12/13/06 4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...
* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
* வில்லனை தான் லவ் பண்ணனும்..
* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
________________________________________________________________
5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...
* அடி வாங்கணும்..
* அடி கொடுக்கணும்..
* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
____________________________________________________________________
6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..
* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..
* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
___________________________________________________________________
கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...
* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
____________________________________________________________________
8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..
* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
_____________________________________________________________________
9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..
* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.
___________________________________________________________________
கதாநாயகி பணக்காரியா இருந்தா..
* திமிர் பிடிச்சவளா இருக்கணும்..
* புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்..
* கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..
____________________________________________________________________
____________________________________________________________________
நொடியில் திரைக்கதை தயார்!-டிப்ஸ்
--------------------------------------------------------------------------------
பொதுவாக மலரும் வசனங்கள் :
1.உங்களோட இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன். ரொம்ப நன்றிங்க. ஆங்...... உங்களோட பேரு?
2.ஏது உங்களுக்கு இவ்வளவு பணம்? சொல்லுங்க? எங்கருந்து கிடைச்சது?
3.உங்களை விட்டா சாவைத் தவிர எனக்கு வேற வழி தெரியல.
4.சொல்லு எங்க அந்த வைரங்கள் எல்லாம்?
5.உங்க போனை நான் கொஞ்சம் யூஸ் பண்ணலாமா?
6.நான் உங்க குழந்தைக்கு அம்மாவா இருக்கேன்.
7.இந்த நாளுக்கு தான் நான் ரொம்ப நாளா காத்திருந்தேன்.
8.இன்னைக்கு நான் ரொம்ப சந்தோ~மா இருக்கேன். ஏன் சொல்லு?
9.டிரைவர் காரை நிறுத்து.
10.மயக்கத்திலிருந்து எழுந்த ஹீரோ (அ) ஹீரோயின் சொல்லும் முதல் வார்த்தை நான் இப்போ எங்கே இருக்கேன்.?
11.இன்ஸ்பெக்டர் அரஸ்ட் ஹிம்.
12.கடவுளே இதுவரை நான் உங்கிட்ட எதுவும் கேட்டதில்ல. இப்போ கேட்கிறேன்.
13.கடவுள் மேல நம்பிக்கை வைங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்.
14.சொன்னா நம்புங்க. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.
15.எங்க அம்மா கையால சமைச்ச சாப்பாட்டுல இருக்க ருசி எந்த ஹோட்டலிலும் கிடைக்காது.
16.நிறுத்துங்க, இந்த கல்யாணம் நடக்கக்கூடாது.
17.என் வயித்துல வளர்ற உங்க குழந்தைக்கு முதல பதில் சொல்லுங்க.
ஹீரோவின் வசனங்கள் :
1.உன் ஆள்ககிட்ட இருக்க துப்பாக்கிய எல்லாம் கீழ போடச் சொல்லு.
2.ஏன்னா நான் ஒரு ஏழை.
3.நான் இருக்கப்ப ஒன்னை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.
4.அம்மா! எல்லோரும் சொல்றாங்க நீங்க நடத்தை கெட்டவங்கன்னு. சொல்லுங்க உண்மையா.
5.சொல்லு எங்கடா என்னோட சுமதி.
ஹீரோயின் வசனங்கள் :
1.உங்கள நினைச்ச இந்த மனசால வேற ஒருத்தற நினைச்சுக்கூட பார்க்க முடியாது.
2.அய்யோ விடுங்க! யாராவது பார்த்துட போறாங்க.
3.ச்சீய்!! நீங்க ரொம்ப மோசம்.
4.நான் மேஜர் ஆகிற வரைக்கும் தான் நீங்க எனக்கு கார்டியன்.
5.அம்மா இவர் தான் என்னை காப்பாத்தினார்.
6.நான் என்ன நினைச்சேனோ அதை நீங்க சொல்லிட்டீங்க.
7. சொல்லுங்க! குடிச்சீங்களா இன்னிக்கு.
சட்டம் :
1. சட்டத்தின் முன்னால எல்லோரும் ஒண்ணுதான்.
2. சட்டத்தை உங்க கையில எடுத்துகிட்டா போலிஸெல்லாம் எதுக்கு?
3. சட்டத்துக்கு முன்னால எதையுமே நிருபிக்கணும்
4. எனவே யுவர் ஹானர், கைதிக்கு இ.பி.கோ. செக்~ன் 302-ன் படி அதிக பட்ச தண்டனையா மரண தண்டனை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
5.சட்டம்! எது சட்டம். என் அப்பாவை து}க்கு மேடைக்கு அனுப்புச்சே அதுவா?
ஹீரோ (அ) ஹீரோயின் உடைய அப்பா :
1. எனக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்ணு இருக்குங்க.
2. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காட்டி என் பொணத்தைத் தான் பார்ப்ப.
3. கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்துல வரதட்சனையோட மீதிப் பணத்தை தந்துர்றேங்க
4. இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன்.
5. என் கண்ணு முன்னால நிக்காத. போடா வெளியே.
ஹீரோ (அ) ஹீரோயின் உடைய அம்மா :
1. கடவுளே எனக்கு தாலி பிச்சை கொடு.
2. தீர்க்க சுமங்கலியா இரும்மா. எந்திரி.
3. உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான்.
4. இன்னொரு தடவை என்னை அம்மா-ன்னு கூப்பிடு.
5. இதைப் பாக்கத்தானா இத்தனை நாளா நான் உயிரோட இருந்தேன்.
6. இன்னும் என்ன சின்னக் குழந்தையாட்டம்? விடுங்க.
7. சொல்லுடி! உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு யாரு காரணம். யாரவன்?
ஹீரோ உடைய தங்கை:
1. அண்ணா எப்போ எனக்கு அண்ணியை காட்டப் போறீங்க?
2. என்னை விடு, என்னை விடு நான் கடவுள்ட்டயே போறேன்.
3. கணவனே கண்கண்ட தெய்வம்.
4. அண்ணா, என் மேல உனக்கு இவ்வளவு பாசமா?
5. உன்னை கெஞ்சி கேட்கிறேன். என்னை போக விடு. என்னை கெடுத்துறாத.
வில்லனின் வசனங்கள்
1. உன்னோட அம்மாவும், தஙகச்சியும் இப்போ என் காவலில் பத்திரமா இருக்காங்க.
2. பணத்தோட நான் சொல்ற இடத்துக்கு வா. மறந்துறாத தனியா வா.
3. போலிஸோட வந்த உன் ஆளோட கற்புக்கு நான் பாதுகாப்பு இல்ல.
4. உன்னைக் காப்பாத்த இங்க யாரும் வர முடியாது. (திடீர்னு ஹீரோ உடைய ஸ்கூட்டர் சுவத்தை உடச்சுட்டு வருது)
5. என் அகாரதியில மன்னிப்புன்ற வார்த்தைக்கு இடமே கிடையாது.
வில்லனின் ஆட்களின் வசனங்கள் :
1. ஓ.கே பாஸ்
2. பாஸ் பணம் கைக்கு கிடைச்சாச்சு.
3. பாஸ் நான் உங்க உப்பை சாப்பிட்டவன் பாஸ்
4. டே! கதவை மூடு. வீட்டுக் காரன் வரான்.
5. டே! பாஸ் உன்னை கூப்பிடுறார்.
டாக்டரின் வசனங்கள் :
1. கங்கிராட்ஸ். நீங்க அப்பாவாக போறீங்க..
2. எதையுமே இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் சொல்ல முடியும்.
3. ஒரு மணி நேரத்துல இந்த மருந்தும், 2 பாட்டில் ரத்தமும் வேணும். உடனே ஏற்பாடு பண்ணுங்க.
4. ஐ ம் சாரி! குழந்தையத்தான் காப்பாத்த முடிஞ்சது.
5. நல்லா ரெஸ்ட் எடுக்கணும். என்ன?
6. இப்போ எல்லாமே மேலிருக்கவன் கையில தான் இருக்கு.
7. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு கழிச்சு வந்திருந்தா கூட எங்களால காப்பாத்திருக்க முடியாது.
8. உங்க அம்மாவுக்கு உடனடியா ஒரு ஆப்ரே~ன் பண்ணனும். அதுக்கு 50,000 பணம் கட்டணும்
ஹீரோ வில்லனிடம்; சரி.. நீ சொல்ற படி செய்றேன்.. ஆனா அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.................................. ( எல்லா படத்துலேயும் இதுக்கு மேலே ஹீரோ என்ன ஆகும்ன்னு சொல்லவே மாட்டார்..)
அப்புறம் ஒரு பொது வசனம்.. கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களுமே பயன் படுத்துவாங்க...
" அதோ..... அவரே வந்துட்டாரே..!"
படத்தின் உச்சகட்ட காட்சியில் படுகாயமுற்ற ஒரு கதாபாத்திரத்தை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்ல முனையும் போது..
"வேண்டாம்.. நான் பிழைக்க மாட்டேன்..!"
--
மணிகண்டன்
--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]