(1) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
(2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
(4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
(5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
(6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
(7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
(9) அடியாத மாடு படியாது
(10) குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
(11) தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
(12) தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
(13) எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
(14) வரவு எட்டணா செலவு பத்தணா
(15) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
(16) ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்
(17) கிட்டாதாயின் வெட்டென மற
(18) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
(19) சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
(20) இக்கரைக்கு அக்கரை பச்சை
(21) ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
(22) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
(23) ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
(24) ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்
(25) யானைக்கும் அடி சறுக்கும்
(26) ஊருடன் ஒட்டி வாழ்
(27) பதறாத காரியம் சிதறாது
(28) கூழானாலும் குளித்துக் குடி
(29) கந்தையானாலும் கசக்கிக் கட்டு
(30) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
(31) ஆடையில்லாதவன் அரை மனிதன்
(32) ஆழம் தெரியாமல் காலை விடாதே
(33) ஆடிப் பட்டம் தேடி விதை
(34) ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்
(35) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
(36) அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்
(37) விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்
(38) மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே
(39) வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
(40) தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்
(41) நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
(42) பானை பிடித்தவள் பாக்கியசாலி
(43) விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
(44) தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
(45) மனமிருந்தால் மார்க்கமுண்டு
(46) ஓருவனுக்கு ஒருத்தி
(47) தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன
(48) காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்
(49) கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
(50) காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்
(51) போகாத ஊருக்கு வழி எது
(52) சாண் ஏறினால் முழம் வழுக்கும்
(53) தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்
(54) கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி
(55) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
(56) தடி எடுத்தவன் தண்டக்காரன்
(57) உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்
(58) பக்கம் பார்த்துப் பேசு
(59) வெளுத்ததெல்லாம் பாலல்ல
(60) மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்
(61) வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ
(62) நாய் வாலை நிமிர்த்த முடியாது
(63) குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
(64) தனக்கு மிஞ்சித் தான் தருமம்
(65) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
(66) ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை
(67) வெட்டு ஒன்று துண்டிரண்டு
(68) சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
(69) சிறு துளி பெரு வெள்ளம்
(70) வருமுன் காப்பதறிவு
(71) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
(72) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(73) முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்
(74) மடியில் கனமிருந்தால் வழியில் பயம்
(75) தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
(76) பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்
(77) தருமம் தலை காக்கும்
(78) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
(79) நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை
(80) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(81) கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
(82) பனை மரத்தடியிலமர்ந்து பாலைக் குடித்தாலுள் கள்ளைக் குடித்ததாய்க் கொள்வார்கள்
(83) யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
(84) மத்தளத்திற்கு இரு புறமும் இடி
(85) கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?
(86) சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது
(87) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை
(88) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
(89) குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்
(90) ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்
(91) குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்
(92) புத்திமானே பலவான்
(93) கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை
(94) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
(95) தானாடா விட்டாலும் சதையாடும்
(96) ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
(97) உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
(98) எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே
(99) நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி
(100) கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது
(101) நுணலும் தன் வாயால் கெடும்
(102) அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது
(103) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
(104) வெயிலில் சென்றவனுக்குத் தான் நிழலின் அருமை புரியும்
(105) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
(106) விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்
(107) ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
(108) கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே
(109) உயிர் காப்பான் தோழன்
(110) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
(111) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
(112) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
(113) படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்
(114) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
(115) ஏழை என்றால் மோழையும் பாயும்
(116) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
(117) உதட்டில் உறவு உள்ளத்தில் பகை
(118) ஆடு பகை குட்டி உறவா?
(119) இளங்கன்று பயமறியாது
(120) பேராசை பெரு நஷ்டம்
(121) மின்னுவதெல்லாம் பொன்னல்ல
(122) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
(123) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
(124) வெறுங்கை முழம் போடுமா?
(125) குரைக்கிற நாய் கடிக்காது
(126) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
(127) இனம் இனத்தோடு சேரும்
(128) புயலுக்குப் பின்னே அமைதி
(129) பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
(130) யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
(131) எறும்பு ஊறக் கல்லும் தேயும்
(132) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
(133) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(134) கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
(135) இரைக்கிற ஊற்றே சுரக்கும் (136) எலி வளையானாலும் தனி வளை
(137) நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்
(138) பெண் என்றால் பேயும் இரங்கும்
(139) யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
(140) கெடுவான் கேடு நினைப்பான்
(142) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(143) தோல்வியே வெற்றியின் முதல் படி
(144) சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா
(145) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
(146) பழகப் பழகப் பாலும் புளிக்கும்
(147) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
(148) பதறிய காரியம் சிதறும்
(149) பசி வந்திடப் பத்தும் பறந்து போம்
(150) நண்டு கொழுத்தால் வளையில் தங்காது
(151) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்
(152) பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
(153) வீட்டில் எலி வெளியில் புலி
(154) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
(155) உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே
(156) வாழு, வாழ விடு
(157) எறிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்
(158) நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது
(159) பணமில்லாதவன் பிணம்
(160) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
(161) பணம் பத்தும் செய்யும்
(162) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே
(163) முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
(164) நெருப்பில்லாமல் புகையாது
(165) ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது
(166) பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
(167) தனி மரம் தோப்பாகாது
(168) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
(169) ஏழை சொல் அம்பலம் ஏறாது
(170) பூசனிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான்
(171) சித்திரமும் கைப்பழக்கம்
(172) வெள்ளம் வருமுன் அணை போடு
(173) தன் கையே தனக்குதவி
(174) பருவத்தே பயிர் செய்
(175) பிள்ளையையுள் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே
(176) கொழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது
(177) வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?
(178) அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
(179) துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
(180) தன்னைப்போல் பிறரை நினை
(182) ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
(183) காலமும் கடலலையும் காத்திருக்காது
(184) இறந்த காலத்தை என்றும் பெற இயலாது
(185) கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?
(186) இளமையில் கல்
(சுட்டது)
ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனாம்..
தென்னையப் பெத்தா எளநீரு
புள்ளையப் பெத்தா கண்ணீரு
மாமியா ஒடைச்சா மண்சட்டி
மருமக ஒடைச்ச பொன்சட்டி
பிடிக்காத மாமியா
கைபட்டாலும் குத்தம்
கால்பட்டாலும் குத்தம்
தாயா புள்ளையா இருந்தாலும்
வாயும் வயிறும் வேறதான?
நொங்கு தின்னவன் ஓடிட்டான்
நோண்டி தின்னவன் மாட்டிட்டான்
ஓசியில குடுத்த மாட்டை பல்லை புடிச்சு பார்த்தானாம்
ஆதாயம் இல்லாம செட்டியார் ஆத்தோட போவாரா?
நண்டு கொழுத்தா
பொந்துல இருக்காது
வர வர மாமியா
கழுத போல ஆனாளாம்
--
மணிகண்டன்
--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view. Any copyrights violations are thus regretted.]