புதுச்சேரி: உலக உருண்டையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வாகனங்களை பயன் படுத்துவதை குறைக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல வெளிநாடுகளில் சைக்கிள்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ருத்ரமூர்த்தி என்பவர், தனது போக்குவரத்திற்கு தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய ரேக்ளா குதிரை வண்டியை பயன் படுத்தி வருகிறார்.
"எங்கள் குடும்பத்தில் தாத்தா காலத்தில் இருந்தே குதிரை வண்டிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு, காருக்கு ஆகும் டீசல் செலவு தொகையை பயன்படுத்தி, குதிரை வண்டியில் ஒரு மாதத்திற்கு பயணம் செய்யலாம்.
கடலுõர், விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம் என எங்கு செல்ல வேண்டி இருந்தாலும் குதிரை வண்டி சவாரிதான். தொடர்ச்சியாக 50 கி.மீ., பயணம் செய்து விட்டு,
குதிரைக்கு சற்று ஓய்வு கொடுத்து பின்னர் பயணத்தை தொடர்கிறேன். குதிரைக்கு அரை கிலோ கொள்ளு
மற்றும் ஏழு கிலோ அருகம்புல் ஆகியவைதான் உணவு' என்கிறார் ருத்ரமூர்த்தி.
நன்றி:தினமலர்
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]