இந்த வார்த்தை படுத்தும் பாடுதான் என்ன? இதை சொல்லப் படும்பாடுதான் என்ன? அப்பப்பா....
இதோ ஐ லவ் யூ சொல்ல ஒரு சில ஆலோசனைகள்.... பயப்படாமல் செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.
சொல்லும் காதல் தான் செல்லும். சொல்லாத காதல் செல்லாது. சொல்ல பயமாக இருக்கிறதா? அப்படியென்றால் இதில் எது உங்களுக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம்.
1. நீங்கள் விரும்பும் நபரை வெளியே அழைத்துச் சென்று, ஐ லவ் யூ என்று எழுதும்படி ஆர்டர் செய்து கேக் வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.
2. ரேடியோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து நீங்கள் காதலிப்பதை உணர்த்தலாமே?
3. உங்களது அல்லது உங்களுக்கு பிடித்தமானவரின் நண்பரிடம் பூ கொடுத்து அனுப்பலாம்.
4. உங்களது காதலை வாய்ஸ் மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பலாம்.
5. அவரின் கையில் கிடைக்கும்படி காதல் கடிதம் கொடுக்கலாம்.
6. வாழ்த்து அட்டை அல்லது கடிதத்தை தபால் மூலம் அனுப்பலாம்.
7. அவருடன் எங்கேனும் செல்லும்போது, காற்றில் எழுதும் பேனாவின் மூலம் எழுதிக் காட்டலாம்.
8. அவர்களைப் பற்றி கவிதை எழுதிக் கொடுக்கலாம்.
9. உங்களுக்கென தனி இணையதள முகவரியை தயார் செய்து அதன் மூலம் அவருக்கு உங்களது காதலை சொல்லலாம்.
10. ரொம்ப வித்தியாசமாக இருக்க வேண்டுமானால் உள்ளூர் நாளிதழில் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம்.
11. அவரது கணினியில் காதல் சின்னத்தை ஸ்கிரீன் சேவராக சேவ் செய்து வைத்துவிடுங்கள்.
12. இனிப்பு அடங்கிய பெட்டியில் காதலை சொல்லும் வாழ்த்து அட்டையை கொரியரில் அனுப்புங்கள்.
13. அவரது புகைப்படத்தைக் கொடுத்து ஓவியமாக வரைந்து வாங்கி அதை அவருக்கு அனுப்புங்கள்.
14. நீங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் மரத்தில் இதயத்தை வரைந்து அதில் உங்களது பெயரை செதுக்கி வையுங்கள்.
15. அவருக்குத் தேவையான, முக்கியமானதொருப் பொருளை வாங்கி பரிசாக அளித்து அவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களது காதலை உரையுங்கள்.
16. காதல் பாடல்களை ஒன்றாக சி.டியில் தொகுத்து பரிசாக அளிக்கலாம்.
17. உங்கள் துணையின் கையில் சிக்கும்படி பூங்கொத்தை வைத்து அதில் ஐ லவ் யூ என்று உங்கள் கைப்பட எழுதி வையுங்கள்.
18. காதல் அட்டையை மின்னஞ்சலில் அனுப்பலாம்.
19. ஒரு பேப்பரை எடுத்து அதனை இதய வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். அதில் "உனக்கு ஒன்று தெரியுமா? நீதான் எனது இதயத்தின் எஜமானி" என எழுதி அவரது கையில் கிடைக்கும்படி செய்யுங்கள்.
20. உங்கள் துணையை நீங்கள் காதலிப்பதற்கான 25 காரணங்களை எழுதி அவரிடம் அளிக்கலாம்.
21. உங்கள் துணையைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை அவருக்குத் தெரியாமல் அறிந்து கொண்டு அவரிடம் அதனை சொல்லி அசத்தலாம்.
வெற்றி நிச்சயம்..... வாழ்த்துக்கள்.
-நன்றி----webulagam
(தோழன்,கண்ணண்.)
[Disclaimer : The blog text are contents as received in forwarded mails. Its nothing to do with my view or concerns]